business

img

மும்பையில் பெட்ரோல் விலை 92 ரூபாயைத் தாண்டியது... 20 நாட்களில் ரூ. 1 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரிப்பு....

புதுதில்லி:
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறினா லும், வரிக்கு மேல் வரிபோட்டு, எந்தக் காலத்திலும் பெட்ரோல் - டீசல் விலைகள் குறைந்துவிடாதபடி மோடி அரசு செய்து வருகிறது.

2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல், கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் மீதான கலால்வரிகள் மூலம் மட்டும் ரூ. 19லட்சம் கோடி ரூபாயை பொதுமக்களிடம் இருந்துமோடி அரசு சுரண்டியிருப்ப தாக அண்மையில் புள்ளி விவரங்கள் வெளியாகின. ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான விலை 23ரூபாய் 43 காசுகளுக்குள் அடங்கும் நிலையில், மோடி அரசு வரிகளாக மட்டும் 60 ரூபாய் வரை வசூலிப்பதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும் தற்போது உயரத் துவங்கியுள்ளன.தலைநகர் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ. 85 ரூபாயையும், அதுவே மும்யில் 24 காசுகள் உயர்ந்து 92 ரூபாயையும் தாண்டியுள் ளது. வெள்ளியன்று தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 85 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் விலை 75 ரூபாய் 63 காசுகளுக்கும் விற் கப்பட்டது. மும்பையிலோ ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 04 காசுகளைத் தொட்டது. சென்னையில் வியாழனன்று 87 ரூபாய் 85 காசுகளாக இருந்த ஒரு லிட்டர்பெட்ரோல் விலை, வெள்ளி யன்று 88 ரூபாய் 16 காசு களுக்கு உயர்ந்தது.தில்லியில், ஜனவரி 1 அன்று 83 ரூபாய் 71 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை ஜனவரி 22 அன்று 85 ரூபாய் 45 காசுகளாகவும், 73 ரூபாய் 87 காசுகளாக இருந்தடீசல் விலை 75 ரூபாய் 63 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2021 ஜனவரியில் மட்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 49 காசுகள் வரைமோடி அரசு உயர்த்தியுள்ளது.

;